தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம்: வேதாரண்யத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள், இலங்கை மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சம்பவத்தைக் கண்டித்து மீனவர்கள் இன்று (செப்.28) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள், இலங்கை மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சம்பவத்தைக் கண்டித்து மீனவர்கள் இன்று (செப்.28) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ கிராமங்களின் மீனவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிகளும் பங்கேற்று ஆதரவளித்தனர்.