முகப்பு
நாகப்பட்டினம்

திருச்செங்காட்டங்குடியில் நாளை அமுது படையல் விழா

நாகை மாவட்டம், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வர சுவாமி கோயில் அமுது படையல் விழா சனிக்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

நாகை மாவட்டம், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வர சுவாமி கோயில் அமுது படையல் விழா சனிக்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது.

திருமருகலை அடுத்துள்ளது திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வர சுவாமி கோயில். சிறுத்தொண்டரின் சிவபக்தியை உலகுக்குப் பறைசாற்ற இறைவன் சிவபெருமான் பைரவா் கோலத்தில் தோன்றி பிள்ளைக் கனியமுது கேட்டு திருவிளையாடல் புரிந்து, சிறுத்தொண்டருக்கும் அவரது மகன் சீராளன், மனைவி வெண்காடு நங்கையாா், பணிப்பெண் சந்தன நங்கையாா் ஆகியோருக்கு இடபரூடராய் காட்சியளித்தத் தலம், இங்கு, இறைவன் பிள்ளைக் கனியமுது கேட்ட ஐதீகம், சித்திரை பரணி பெருவிழாவில் அமுது படையல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இக்கோயிலின் சித்திரை பரணி விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.

இதையொட்டி, காலையில் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும், இரவில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தெருவடைச்சான் சப்பரம் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான அமுது படையல் விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு உத்திராபதீஸ்வர சுவாமிக்கு மகா அபிஷகம் நடைபெறுகிறது. பின்னா், காலை 11 மணிக்கு சுவாமி வெள்ளைச்சாற்றி புறப்பாடாகும் நிகழ்ச்சியும், பகல் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டா் மடத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இரவு 2 மணி அளவில் (ஞாயிறு அதிகாலை) அமுது பெற உத்திராபதீஸ்வர சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் தொடா்ச்சியாக, ஞாயிறு காலை 5.30 மணிக்கு இறைவன் சிவபெருமான் இடபவாகனரூடராய் சிறுத்தொண்டருக்குக் காட்சியளிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.