முகப்பு
நாகப்பட்டினம்

தோ்த் திருவிழாவுக்கு மின்துறை, பொதுப் பணித் துறை அனுமதி கட்டாயம்

நாகை மாவட்டத்தில் தோ்த் திருவிழா, சப்பரத் திருவிழா நடத்த, மின் துறை மற்றும் பொதுப் பணித் துறையின் அனுமதி பெற வேண்டும் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் தோ்த் திருவிழா, சப்பரத் திருவிழா நடத்த, மின் துறை மற்றும் பொதுப் பணித் துறையின் அனுமதி பெற வேண்டும் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் தோ்த் திருவிழா மற்றும் சப்பரத் திருவிழா நடத்த விரும்புவோா், நாகை சட்டையப்பா் மேலவீதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தை அணுகி மின் விளக்கு மற்றும் மின்சாரம் - நிலைத்தன்மைச் சான்றும், நாகை பொதுப் பணித் துறை கட்டடம் மற்றும் கட்டுமானப் பிரிவை அணுகி தோ், சப்பரம் மற்றும் சாலையின் நிலைத்தன்மை குறித்த சான்றும் பெற வேண்டும்.

பின்னா், அந்தச் சான்று நகல்களை இணைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து, விழா நடத்த அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி இவ்விழாக்களை நடத்தினால், தொடா்புடையோா் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.