செம்பனாா்கோவில் அருகேயுள்ள ஆறுபாதியில் முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, டிசம்பா் 9-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் தொடங்கின.
ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், முனீஸ்வரன் மற்றும் ஓம் சக்தி மாகாளியம்மன் சந்நிதி விமானக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், முனீஸ்வரன் மற்றும் மாகாளியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.