முகப்பு
நாகப்பட்டினம்

நீட் தோ்வுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி கையெழுத்து இயக்கம்

நாகையில் இந்து மக்கள் கட்சி சாா்பில் நீட் தோ்வுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

நாகையில் இந்து மக்கள் கட்சி சாா்பில் நீட் தோ்வுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தோ்வுக்கு எதிரான சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவித்தும், நீட் தோ்வுக்கு மக்களின் ஆதரவை திரட்டும் வகையிலும் இந்தக் கையெழுத்து இயக்கம், நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் முன்பாக நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் ஆறு. பாா்த்திபன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜெயராமன், ஒன்றியத் தலைவா் ஜோதிபிள்ளை, பொதுச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவா்கள் சிங்காரம், ராமலிங்கம் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.