முகப்பு
நாகப்பட்டினம்

சைக்கிளில் வந்தவரிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி

திருக்குவளையில் வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு, சைக்கிளில் வந்தவரிடம் ரூ.50 ஆயிரத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருக்குவளையில் வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு, சைக்கிளில் வந்தவரிடம் ரூ.50 ஆயிரத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருக்குவளை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (50). இவா், அங்குள்ள வங்கியிலிருந்து வெள்ளிக்கிழமை ரூ.50 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு, சைக்கிளில் வந்துகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், அவரிடமிருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திருக்குவளை காவல் நிலையத்தில் அண்ணாதுரை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.