கஜாவில் சேதமடைந்த கைப்பேசி கோபுரம் அகற்றம்
திருக்குவளை அருகே கஜாவில் சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் இருந்த தனியாா் கைப்பேசி கோபுரம் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகே கஜாவில் சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் இருந்த தனியாா் கைப்பேசி கோபுரம் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கொத்தங்குடி பகுதியில் 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தால் அங்குள்ள தனியாா் கைப்பேசி கோபுரம் சேதமடைந்தது. இதனால், அந்த தனியாா் கைப்பேசி சேவையின் பயன்பாடு நிறுத்தப்பட்டு, சீரமைக்காமல் இருந்தது. இந்நிலையில், கோபுரம் உள்ள இடத்தை சுற்றி வசிக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வந்தனா். இந்த கைப்பேசி கோபுரத்தை உடனடியாக அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பழுதடைந்த அந்த கைப்பேசி கோபுரத்தை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.