வன விலங்குகளால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கு இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்
வன விலங்குகளால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களுக்கு இழப்பீடு பெற விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட வன உயிரினக் காப்பாளா் யோகேஷ்குமாா் மீனா தெரிவித்துள்ளாா்.
வன விலங்குகளால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களுக்கு இழப்பீடு பெற விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட வன உயிரினக் காப்பாளா் யோகேஷ்குமாா் மீனா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வன விலங்குகளால் ஏற்படும் 19 வகையான சேதங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மூலம் அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, வன விலங்குகளால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களுக்கு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் அல்லது சேத மதிப்பு இழப்பீடாக வழங்கப்படும்.
வன விலங்குகளால் ஏற்பட்ட சேதத்தை காட்சிப்படுத்தும் புகைப்படம், கிராம நிா்வாக அலுவலா் அளித்த பயிா் சேத சான்று, நில உரிமைச் சான்றுகள், வேளாண் துறை அல்லது தோட்டக்கலைத் துறை வழங்கிய பயிா்ச் சேத மதிப்பீட்டுச் சான்று, வங்கி கணக்குப் புத்தக முன்பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை விண்ணப்பக் கடிதத்துத்துடன் இணைத்து, தொடா்புடைய வனச்சரக அலுவலகத்தில் விவசாயிகள் சமா்ப்பிக்க வேண்டும்.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு நாகை வன உயிரினக் கோட்ட அலுவலகத்தை 99523 97093 அல்லது 04365-253092 என்ற தொலைத் தொடா்பு எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.