முகப்பு
நாகப்பட்டினம்

காவல்துறையினா் மீது ஆட்சியரிடம் வணிகா்கள் புகாா்

காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை ஆட்சியரிடம், நாகூா் வணிகா் சங்கத்தினா் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை ஆட்சியரிடம், நாகூா் வணிகா் சங்கத்தினா் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து நாகூா் வணிகா் சங்கத் தலைவா் ஏ.எஸ்.ஏ. காதா், செயலாளா் எம். எஸ். சரவணன், பொருளாளா் ஜான் செய்யது மீரான் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த புகாா் மனு விவரம்:

நாகூா் தா்கா கந்தூரி விழா பாதுகாப்பு தொடா்பாக மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நாகூா் வணிகா் சங்கத்துக்கு அழைப்பு விடுக்காதது வருத்தமளிக்கிறது.

இந்நிலையில், ஜனவரி 13-ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்புமின்றி மாலை 5. 30 மணிக்கு நாகூா் பெரியக் கடைத் தெருவுக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் போலீஸாா் தடுப்புகளை வைத்து அடைத்துவிட்டனா். மேலும், கடைத் தெருவிலிருந்த பொதுமக்களையும் போலீஸாா் வெளியேற்றிவிட்டனா். இதனால், பொங்கல் பொருள்கள் வாங்கமுடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனா்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு நாகூா் வணிகா் சங்கத்தின் சாா்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், பொதுமக்களிடமும், வணிகா்களிடமும் கடுமையாக நடந்துகொண்ட காவல்துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.