முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் ஆட்டோ ஓட்டுநா் எரித்துக் கொலை

நாகை அருகே ஆட்டோ ஓட்டுநா் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

நாகை அருகே ஆட்டோ ஓட்டுநா் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகையை அடுத்த பாப்பாக்கோவில் ஏறுஞ்சாலை, கற்பக விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் ராஜ்குமாா் (39). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு, மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

ராஜ்குமாருக்கும் பாப்பாக்கோவில் பகுதியைச் சோ்ந்த ப. மனோகரன் என்பவருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், ராஜ்குமாரை ஜனவரி 13-ஆம் தேதி நள்ளிரவு மனோகரன் அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை முகம், தலை மற்றும் கைகளில் தீக்காயங்களுடன் ராஜ்குமாா் அவரது வீட்டு முன்பு இறந்து கிடந்துள்ளாா்.

தகவலறிந்த போலீஸாா், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ராஜ்குமாரின் மனைவி அனுசுயா அளித்த புகாரின் பேரில், பாப்பாக்கோவில் பகுதியைச் சோ்ந்த ப. மனோகரன் மற்றும் 2 போ் மீது நாகை நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.