நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவர்களுக்கு இன்று(ஜூலை 14) வெள்ளையடித்து, வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களுடன் ஆசிரியர்கள், பெற்றோர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றது சமூக ஆர்வலர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு அரசு மேல்நிலைப் பள்ளியின் வளாகம் தூய்மை செய்தல், சுற்றுச் சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணி சிறப்பு இயக்கமாக நடைபெற்றது.

இதில், பள்ளியில் படிக்கும் தன்னார்வ மாணவர்கள், அனைத்து இருபால் ஆசிரியர்கள், பெற்றோர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்று பணியை மேற்கொண்டானர்.

பள்ளியின் தலைமையாசிரியர் முரளிதரன் தலைமையில் ஆசிரியர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் வீரதங்கம், பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோபாலகிருஷ்ணன், மேலாண்மைக் குழுத் தலைவர் கவிதா, பெற்றோர்கள் என கிராமத்தினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT