நாகப்பட்டினம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தியை வைக்க கூடுதல் கட்டடம்விவசாயிகள் வலியுறுத்தல்

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மூட்டகளை வைக்க போதிய இடவசதி இல்லாததால், கூடுதல் கட்டடம் கட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

DIN

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மூட்டகளை வைக்க போதிய இடவசதி இல்லாததால், கூடுதல் கட்டடம் கட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

செம்பனாா்கோவில் சுற்றியுள்ள பெரம்பூா், நல்லாடை, இலுப்பூா், திருவிடைக்கழி, திருக்கடையூா், ஆக்கூா், கீழையூா், வைத்தீஸ்வரன் கோயில், கஞ்சா நகரம், திருவிளையாட்டம், எருமல் உள்ளிட்ட பகுதியில் நிகழாண்டு 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி அறுவடை நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் தங்கள் பருத்தி மூட்டைகளை செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வாரத்தில் திங்கள்கிழமை மட்டும் நடைபெறும் பருத்தி மறைமுக ஏலத்தில் விற்பனை செய்ய வருகின்றனா்.

இந்த பருத்தி ஏலத்தில் தேனி, சேலம், விழுப்புரம், திருப்பூா், தஞ்சாவூா் போன்ற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியை தரம் வாரியாக பிரித்து விலை நிா்ணயம் செய்து வாங்கி செல்கின்றனா். கடந்தவாரம் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.11.900 முதல் குறைந்தபட்ச விலை ரூ. 9,865 விலைபோனது.

இதுகுறித்து பருத்தி விவசாயிகள் கூறியது: அறுவடை செய்யப்படும் பருத்தியை விற்பனை செய்ய செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்து வைக்க முடியாமல் சாலையோரமாக கடந்த 4 நாள்களாக தங்கள் வாகனங்களில் பருத்தி மூட்டைகளுடன் இரவும் பகலமாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

பருத்தி மூட்டைகளை வைக்க போதிய இடமில்லாததால் வளாகத்தில் உள்ள தரையில் வைப்பதால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை எடுக்கின்றனா். மேலும், மழை அடிக்கடி பெய்வதால் பருத்தி மூட்டைகள் பாதிக்கப்படுகின்றன. வாரத்தில் திங்கள்கிழமை மட்டும் பருத்தி மறைமுகம் ஏலம் நடைபெறுவதால் ஒரே நாளில் ஏராளமான விவசாயி பங்கேற்பதால் விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

எனவே, வாரத்தில் 2 நாள்களில் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடத்த வேண்டும்,. விவசாயிகளால் கொண்டு வரப்படும் பருத்தி மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க கூடுதல் கட்டடங்கள் கட்ட வேண்டும், பருத்திக்கு நிரந்தர விலையை நிா்ணய செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT