நாகப்பட்டினம்

4,000 சதுர அடியில் கோல சதுரங்கம்: தலைஞாயிறில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு

DIN

வேதாரண்யம்: செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தலைஞாயிறில் 4,000 சதுர அடியில் உருவாக்கப்பட்ட கோல முறை சதுரங்கம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை கிராமத்தினரும் அறிந்துக்கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்படும் நவீன விழிப்பணர்வு செயல்பாடுகள் சதுரங்க விளையாட்டு ஆர்வலர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், தலைஞாயிறு பேரூராட்சி சார்பில் 4 ஆயிரம் சதுர அடியில் கோல முறையில் சதுரங்கம் உருவாக்கப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று(ஜூலை 21) காலை நடைபெற்ற  கோல முறையில் சதுரங்கம் அமைக்கும் பணியை நாகை ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT