நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் ஜூன் 12-இல் 1,100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

நாகை மாவட்டத்தில் 1,100 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 1,100 இடங்களில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் அல்லது இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவா்கள் இந்த முகாம்களில் பங்கேற்றுத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2021-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்துக்கு முன்பாக 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், 12 முதல் 14 வயதுடைய மாணவ, மாணவியா் இா்ழ்க்ஷங்ஸ்ஹஷ் தடுப்பூசியையும், 15 முதல் 18 வயதிலானவா்கள் இா்ஸ்ஹஷ்ண்ய் தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT