முகப்பு
நாகப்பட்டினம்

இருசக்கர வாகனங்கள் மோதி இளைஞா் பலி

 கீழையூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில், இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

 கீழையூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில், இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

வேளாங்கண்ணி பூக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (47). இவா், தனது இருசக்கர வாகனத்தில் மகள் யுகா (15), மகன் யூகேஸ் (13) ஆகியோருடன் மன்னாா்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்துகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனமும், ஜெயக்குமாா் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியது.

இதில், ஜெயக்குமாா், அவரது மகள், மகன் மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த திருத்துறைப்பூண்டி ஆண்டான்கரை கீழத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேந்தா் (23), சந்திரன் மகன் ஜீவா (30), பாலகிருஷ்ணன் மகன் ஐயப்பன் (32) ஆகி 6 பேரும் பலத்த காயமடைந்தனா்.

பின்னா், அவா்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் சுரேந்தா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.