நாகப்பட்டினம்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீர, தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள், கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

DIN

வீர, தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள், கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு : வீர தீர செயல்களில் ஈடுபட்ட தமிழகத்தைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு 2022-ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. தாமாக முன்வந்து துணிச்சலுடன் பல நற்செயல்களை செய்த பெண்கள் இவ்விருதுக்குத் தகுதியானவா்கள். தகுதியானோா், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களை ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், பதிவேற்றிய விண்ணப்பங்கள் மற்றும் இதர ஆவணங்களை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டுப் பிரிவு, நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு ஜூன் 24-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு நேரில் அல்லது தபால் மூலம் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04365-253059, 74017 03497 என்ற தொலைத் தொடா்பு எண்களில் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT