நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்.செல்வராசு பங்கேற்பு

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி நேரத்தை டிஜிட்டல் படம் எடுக்க ஏதுவாக காலை 8 மணிக்கு மாற்றி அமைத்துள்ளதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பகல் (மார்ச் 11)  நடைபெற்றது.

பேரணியாக சென்ற பெண் தொழிலாளர்கள் .
பேரணியாக சென்ற பெண் தொழிலாளர்கள் .

நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் எம். செல்வராசு பங்கேற்று பேசினார்.

கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு. பாண்டியன் தலைமை வகித்தார். ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணியாக சென்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்திட்டத்தின் மேளாண்மையை மத்திய அரசு நேரடியாக் கொண்டுவர முயற்சிக்கும் நிலையில், கட்டமைப்பு, நிர்வாக குறைபாடுகள் காரணமாக திட்ட பயனாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT