முகப்பு
நாகப்பட்டினம்

நெல் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ. ஆய்வு

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் கீழ்வேளூா் எம்எல்ஏ. வி.பி. நாகைமாலி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் கீழ்வேளூா் எம்எல்ஏ. வி.பி. நாகைமாலி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் தரம் மற்றும் ஈரப்பதம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். மேலும், கொள்முதல் செய்யப்பட்ட தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அனுப்பிவைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும், தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அவருடன் சிபிஎம் தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் ஏ. ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி. லதா, ஏ. வேணு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளா் டி. செல்லையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.