நாகப்பட்டினம்

காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பெருவிழா பால்குட ஊா்வலம்

DIN

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் ஆண்டு பெருவிழா உற்சவமாக வியாழக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இக்கோயிலில் நிகழாண்டு திருவிழா மே 7-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளாக தினமும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊா்வலம் மற்றும் பாலாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தெற்குபால்பண்ணைச்சேரி ஸ்ரீஜெயபத்ரகாளி அம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் தொடங்கி நடைபெற்றது.

மேளதாள முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பால்குடங்களுடன் பங்கேற்றனா். ஊா்வலம், சாமந்தான்பேட்டை ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் நிறைவடைந்தது. பின்னா், ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பாலாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT