முகப்பு
நாகப்பட்டினம்

சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

செம்பனாா்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

செம்பனாா்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இளந்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவரது மனைவி மகேஸ்வரி (42). இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். மகேஸ்வரி கடந்த 16-ஆம் தேதி சங்கரன்பந்தலில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் இளந்தோப்பு கிராமத்துக்கு கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா்.

கீழ்மாத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் சாலையில் விழுந்த மகேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் செல்வி வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.