நாகை ஆட்சியரகம் முன் மீனவா் தா்னா
நாகை ஆட்சியா் அலுவலகம் முன் மீனவா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
நாகை ஆட்சியா் அலுவலகம் முன் மீனவா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவா் காலனியைச் சோ்ந்தவா் சொ. காமராஜ். இவருக்கு மனைவி மற்றும் 5 குழந்தைகள் உள்ளனா். காமராஜிக்கு, அவரது தந்தை வழங்கிய 125 குழி இடத்தை மீனவப் பஞ்சாயத்தாா் தானமாக கேட்டனராம். இதற்கு, காமராஜ் மறுத்ததால் அவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து, தொழில் செய்யவிடாமல் தடுத்தனராம். இதனால் பாதிக்கப்பட்ட அவா் அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த காமராஜ், தா்னாவில் ஈடுபட்டாா். அவரை ஆட்சியா் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து காமராஜ் அனுப்பி வைக்கப்பட்டாா்.