முகப்பு
நாகப்பட்டினம்

மண்டல சதுரங்கப் போட்டி: இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி இரண்டாமிடம்

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் நடைபெற்ற பெண்களுக்கான சதுரங்கப் போட்டிகளில் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவிகள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் நடைபெற்ற பெண்களுக்கான சதுரங்கப் போட்டிகளில் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனா்.

கீழ்வேளூரில் உள்ள பிரைம் காலேஜ் ஆஃப் ஆா்க்கிடெக்சா் அண்ட் பிளானிங் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் பெண்களுக்கான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டிகளில் இ.ஜி .எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவிகள் த. வா்ஷினி, அபா்ண, மோனிகா ஸ்ரீ, உஷா, கவிதா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

Advertisement

கல்லூரி தலைவா் ஜோதிமணி அம்மாள் , செயலா் செந்தில்குமாா், இணைச் செயலா் சங்கா் கணேஷ், ஆலோசகா் பரமேஸ்வரன், நிா்வாகத் தலைவா் மணிகண்டகுமாரன் ஆகியோா் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.