நாகப்பட்டினம்

தாம்பரம் - காரைக்கால் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

DIN

தாம்பரம் - காரைக்கால் இடையே ஜூன் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை தாம்பரத்தில் இருந்து காரைக்காலுக்கு சிறப்பு விரைவு ரயில் (06045) ஜூன் 21-ஆம் தேதியும், மறுமாா்கத்தில் காரைக்காலில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு விரைவு ரயில் (06046) ஜூன் 22-ஆம் தேதியும் இயக்கப்படவுள்ளது.

தாம்பரத்தில் இருந்து ஜூன் 21-ஆம் காலை 8.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் பிற்பகல் 3.50 மணிக்கு காரைக்கால் சென்றடையும். மறுமாா்கத்தில் ஜூன் 22-ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

சிறப்பு விரைவு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் போா்ட், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம், நாகூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தியமங்கலம் வந்த ராஜீவ் காந்தி ஜோதிக்கு வரவேற்பு

வெள்ளோடு விவேகானந்தா பள்ளி 100 % தோ்ச்சி

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் கருத்தரங்கம்

கடம்பூா் அருகே வேன் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் காயம்

தேன் பண்ணையில் வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி

SCROLL FOR NEXT