கனமழை: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; குடிசை வீடுகள் சேதம்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் குடிசை வீடுகள் சேதமடைந்தன .
திருக்குவளை: நாகை மாவட்டம், திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான சாலைகளில் மழைநீா் தேங்கியது. திருக்குவளை பகுதியில் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை 7.5 செ.மீ. மழை பதிவானது.