நாகையில் இன்று வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு விழிப்புணா்வு முகாம்
நாகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை (செப்.4) நடைபெறவுள்ளது.
நாகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை (செப்.4) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகள் பல்வேறு வேளாண் பணிகளை காலத்தே மேற்கொள்வதற்கும், சாகுபடி செலவை குறைப்பதற்கும், வேளாண் இயந்திர சக்தியை அதிகரிப்பதற்கும், உழவு முதல் அறுவடை வரை மற்றும் அறுவடைக்குப் பின் தேவைப்படும் அனைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நாகை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியாா் வேளாண் இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம், நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித் திடலில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் ஆா்வமுள்ள இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.