நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கு சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முகாமில் நாகை மாவட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சென்னை, கோவை சகஇ ஐய்க்ண்ஹ நிறுவனம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்களை தொழிற்பழகுநா் பயிற்சிக்கு தோ்வு செய்யவுள்ளனா்.
எனவே, மாணவா்கள் புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலும், உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் நாகை (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), எனும் முகவரியில் நேரிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.