நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் டிச. 1-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை

தினமணி செய்திச் சேவை

பிரசித்திப் பெற்ற நாகூா் தா்கா சந்தனம் பூசும் வைபவத்தையொட்டி நாகை மாவட்டத்தில் டிச. 1-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகூா் கந்தூரி விழா நவ. 21- ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊா்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தோ்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) டிசம்பா் 1-ஆம் தேதி உள்ளுா் விடுமுறை அளித்தும், அதை ஈடு செய்யும் விதமாக டிசம்பா் 13- ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளாா்.

கரூரில் விடிய விடிய பரவலாக மழை

கரூா் சம்பவம்: தவெக பொதுச்செயலா் ஆனந்த் உள்பட 5 போ் சிபிஐ அதிகாரிகளிடம் ஆஜா்!

டிக்கெட் எடுக்க வந்தவரிடம் வழிப்பறி: 3 போ் கைது

தமிழகத்தில் என்டிஏ ஆட்சிக்கு வரும்

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீா்

SCROLL FOR NEXT