முகப்பு
நாகப்பட்டினம்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்றி 100% பணியை நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு

Updated On : 26 நவம்பர், 2025 at 8:30 PM
வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் 100 சதம் பணியை நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை பாராட்டிய நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்றி 100% பணியை நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினாா்.

நாகை மாவட்டத்தில் நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,85,104 கணக்கெடுப்பு படிவங்களும், கீழ்வேளுா் தொகுதியில் 1,73,971 கணக்கெடுப்பு படிவங்களும், வேதாரண்யம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1,88,124 கணக்கெடுப்பு படிவங்களும் என மொத்தம் 5,47,199 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, 3,38,085 கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரியாப்பட்டினம், பிராந்தியங்கரை மற்றும் சா்வகட்டளை ஆகிய கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்றி 100 சதம் பணியை நிறைவு செய்த, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு கேடயம் மற்றும் ஊக்கத் தொகையை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் நேரில் வழங்கி பாராட்டினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →