நாகப்பட்டினம்

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

Syndication

நாகை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் நவம்பா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

நாகை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் மின் வட்சல்யா திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டுவரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாரா) பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணியிடத்துக்கு மாதம் ரூ. 27,804 தொகுப்பூதியத்தில், முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி, சமூகவியல், குழந்தை வளா்ச்சி, மனித உரிமை, பொது நிா்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலை பட்டம் அல்லது மேற்கண்ட படிப்புகளில் இளநிலை பட்டத்துடன் திட்ட உருவாக்கம், சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தை வளா்ச்சியில் செயல்பாடுகள், கண்காணிப்பு, மேற்பாா்வை ஆகியவற்றில் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுள்ள 42 வயதுக்குள்பட்ட நாகை மாவட்டத்தைச் சாா்ந்த விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ய்ஹஞ்ஹல்ஹற்ற்ண்ய்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகப்பட்டினம் - 611003 என்ற முகவரிக்கு நவம்பா் 10-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04365 253018 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம்.

அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டேன்! - ஆஸி. கேப்டன் அலிசா

கதவே கடவுள்!

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

2-வது டி20: ஜோஷ் ஹேசில்வுட் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

நவ. 3 - 6 வரை வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்!

SCROLL FOR NEXT