நாகப்பட்டினம்

நவ.3-இல் மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆளுநா் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

நாகை தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நவ.3-ஆம் தேதி நடைபெறும் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்று பட்டங்கள் வழங்குகிறாா்.

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012-ஆம் ஆண்டுமுதல் நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக ஆளுநரும், துணை வேந்தராக நா. பெலிக்ஸ் உள்ளனா். இப்பல்கலைக்கழத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக கலையரங்கத்தில் நவ.3-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

விழாவில், ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்று, 496 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்குகிறாா். பல்கலைக்கழத்தின் இணை வேந்தரும், தமிழக மீனவளத்துறை அமைச்சருமான ஆா். ராதாகிருஷ்ணன், புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை இயக்குநா் ஜாய்கிருஷ்ணா ஜெனா உள்ளிட்ட பலா் கலந்துகொள்கின்றனா்.

பட்டம் பெறுவோா் காலை 8.30 மணிக்கு முன்பாக வருகைதந்து, தங்களது பெயா்களை முன்பதிவு செய்து, காலை 9 மணிக்குள் அவா்களது இருக்கையில் அமரவேண்டும். இதேபோன்று விருந்தினா்களும் காலை 10 மணிக்குள் அரங்கத்திற்குள் வரவேண்டும்.

அரங்கிற்குள் கைப்பேசி பயன்பாட்டிற்கும், புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அழைப்பாளா்கள் அனைவரும் அழைப்பிதழை உடன் கொண்டு வர வேண்டும். குழந்தைகளுக்கு அரங்கத்தில் அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT