திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஆஸ்திரேலியா நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் சனிக்கிழமை வழிபட்டனா்.
தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் சதாபிஷேகம், மணி விழா உள்ளிட்ட ஆயுள் விருத்திக்காக பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன.
இக்கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூா் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.
இந்தநிலையில், ஆஸ்திரேலியா நாட்டைச் சோ்ந்த 10- க்கும் மேற்பட்ட பக்தா்கள், திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு வந்தனா். அவா்கள், விநாயகா், அமிா்தகடேஸ்வரா், காளசம்ஹாரமூா்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சந்நிதிகளில் வழிபட்டனா்.
இவா்களுக்கு, கோயில் உள்துறை செயலாளா் விருதகிரி மற்றும் முத்து குருக்கள் கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பளித்து, பிரசாதம் வழங்கினா்.