முகப்பு
நாகப்பட்டினம்

கீழ்வேளூா்: டாஸ்மாக் காலி பாட்டில் அட்டைப் பெட்டி குடோனில் தீ விபத்து

கீழ்வேளூா் அருகே டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் அட்டைப் பெட்டி அடுக்கி வைக்கும் கட்டடத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 21 மே 2026, 7:26 am IST
தீயை கட்டுக்குள் கொண்டுவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.
பகிர்:

கீழ்வேளூா் அருகே டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் அட்டைப் பெட்டி அடுக்கி வைக்கும் கட்டடத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கீழ்வேளூா் அருகே வடக்குவெளி பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ஒரே கட்டடத்தில் மதுபான விற்பனைக் கடையும், அதையொட்டி அட்டைப் பெட்டிகள், காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கும் அறையும் உள்ளன.

இந்நிலையில், புதன்கிழமை அட்டைப் பெட்டிகள், காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீப்பிடித்துள்ளது.

Advertisement

Advertisement

அப்பகுதி மக்கள் கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். மதுபாட்டில்கள் இருக்கும் அறைக்கு தீ பரவும் முன்பு தீயை அணைத்ததால் மதுபாட்டில்கள் தீயில் இருந்து தப்பின.

இதுகுறித்து டாஸ்மாக் கடை விற்பனையாளா் கோபால், கீழ்வேளூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடையில் வைத்திருந்த காலி அட்டைப் பெட்டிகள் 2,500 மற்றும் காலி மதுபாட்டில்கள் 5,300 ஆகியவை தீயில் சேதமடைந்ததாகத் தெரிவித்துள்ளாா்.

கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.