திருவாரூர்

ஆழித் தேரோட்ட விழாவில் கலைநிகழ்ச்சிகள்

திருவாரூர் தியாகராஜர் கோயில் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலை நிகழ்ச்சியை திரளானோர் கண்டு ரசித்தனர்.

DIN

திருவாரூர் தியாகராஜர் கோயில் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலை நிகழ்ச்சியை திரளானோர் கண்டு ரசித்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சன்னிதி தெரு மற்றும் கோயில் வளாகத்தில் விளையாட்டுப் பொருள்கள், அழகு சாதனப்பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடைகள் தாற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 2 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோயில் ராஜகோபுரம் முன்பு ஞாயிற்றுக்கிழமை கரகாட்டம், காவடியாட்டம், கட்டக்கால் ஆட்டம், புலியாட்டம், கருப்பசாமி ஆட்டம், காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தன. தொடர்ந்து விஜயாகண்ணன் குழுவினரின் பக்திப்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு வயலின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் என். மாதவன் செய்திருந்தார். இதேபோல் ஆழித்தேர் கூடம் அருகே ஸ்ரீபழனியாண்டவர் கோயில் முன்பு பக்திப்பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT