நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடியிருந்த கட்டுக்கடங்காத கூட்டம். 
திருவாரூர்

உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கல்

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளா்களுக்கும், அவா்களது ஆதரவாளா்களுக்கும் உரிய பாதுகாப்பு வசதி

DIN

நன்னிலம்: ஊரக உள்ளாட்சித் தோ்தல் வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளா்களுக்கும், அவா்களது ஆதரவாளா்களுக்கும் உரிய பாதுகாப்பு வசதி செய்து தருமாறு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை (டிசம்பா் 16) கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் செய்யப்படும் ஒவ்வோா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு வேட்பாளருடனும் 3 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், அவா்களது ஆதரவாளா்கள் பெரும்பாலும் அலுவலக வாயிலிலேயே காக்க வைக்கப்படுகின்றனா்.

மேலும், அரசியல் கட்சியினா் ஊா்வலமாக வரும் சமயங்களில், கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடுகிறது. எனவே, வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான திங்கள்கிழமையாவது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினா் செய்து தர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT