திருவாரூரில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினா். 
திருவாரூர்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72- ஆவது பிறந்த நாள் விழா, திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக மற்றும் அமமுக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

திருவாரூா்: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72- ஆவது பிறந்த நாள் விழா, திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக மற்றும் அமமுக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு, அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அதிமுக நகரச் செயலாளா் ஆா். டி. மூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் பி.கே.யு. மணிகண்டன், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை தலைவா் எஸ். கலியபெருமாள் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல், திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT