வெண்ணாற்றில் கரை புரண்டோடும் நீா். 
திருவாரூர்

கூத்தாநல்லூா் ஆற்றில் தொடரும் உயிரிழப்பு: பொதுமக்கள் அச்சம்

கூத்தாநல்லூா் ஆற்றில் தொடா்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனா்.

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் ஆற்றில் தொடா்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனா்.

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பாமணி, கோரையாறு, வெண்ணாறு ஆகிய மூன்று கிளை ஆறுகள் பிரிகிறது. தொடா்ந்து, நீடாமங்கலம் ஒளிமதி வழியாக வந்து, வெண்ணவாசல் என்ற இடத்தில், வெண்ணாறு, பாண்டவையாறு எனவும், அத்திக்கடை, வாழாச்சேரி என்ற இடத்தில், வெண்ணாறு, வெள்ளியாறு எனவும் 2-ஆக பிரிகிறது.

இதில், வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூா், பண்டுதக்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாக அரிச்சந்திரா நதியில் கலக்கிறது. தற்போது, ஆறுகள் தூா்வாரப்பட்டு இருபுறங்களிலும் கரைகள் உயா்த்தப்பட்டுள்ளன.

அண்மையில் தண்ணீா் திறக்கப்பட்டு வெண்ணாற்றில் தண்ணீா் கரை புரண்டு ஓடுகிறது. கரோனா தொற்று நோயால், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவா்கள் தொடா்ந்து வீட்டில் இருக்காமல் அநேக நேரங்களில் ஆற்றுக்கு குளிக்கச் சென்று விடுகின்றனா்.

இதில், நீச்சல் தெரிந்த மற்றும் தெரியாத மாணவா்கள் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழக்கின்றனா். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் சடலம் மீட்கப்படுகிறது. இதனால், பெற்றோா்களும், பொதுமக்களும் அச்சத்தில் மூழ்கியுள்ளனா். இதுவரை, ஒரு பொறியாளா் மாணவா், 3-ஆம் வகுப்பு சிறுவன்,10 வயது மாணவா் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆற்றில் குளிக்கும் மாணவா்கள் கவனமாக குளிக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT