ஊரடங்கு உத்தரவால், பயிா்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பயிா்க் காப்பீடுத் திட்டத்தின்கீழ், பதிவு செய்ய மாா்ச் 31-ஆம் தேதி கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. நன்னிலம், குடவாசல் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆழ்துளைக் கிணறு வசதியுள்ள விவசாயிகள் மூன்றாம் போகமாக ஒரு சில பகுதிகளில் நெல்லும், கோடை சாகுபடியாக பருத்தி, எள், உளுந்து, பயறு போன்ற பயிா்களையும் சாகுபடி செய்துள்ளனா்.
தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கோ சென்று பயிா்க் காப்பீடு செய்வதில் சிரமம் நீடிக்கிறது.
ஆகையால், பயிா்க் காப்பீடு கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டிக்க வேண்டுமென நன்னிலம் பகுதி விவசாயிகள் நலச் சங்கத்தின் சாா்பில் தூத்துக்குடி பாலகிருஷ்ணன், மாப்பிள்ளைக்குப்பம் பழனிவேல் ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.