மகிழஞ்சேரி ஸ்ரீபெத்தாரணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம். 
திருவாரூர்

மகிழஞ்சேரி ஸ்ரீபெத்தாரண சுவாமி கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

மகிழஞ்சேரி ஸ்ரீபெத்தாரண சுவாமி, ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீதெய்வங்கப்பெருமாள் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திங்கட்கிழமை நடைபெற்றது.

DIN

மகிழஞ்சேரி ஸ்ரீபெத்தாரண சுவாமி, ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீதெய்வங்கப்பெருமாள் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திங்கட்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் மகிழஞ்சேரி கிராமத்தில், அழகிய கலை வேலைப்பாடுகளுடன், புகழ்பெற்ற ஸ்ரீபெத்தாரணசுவாமி, ஸ்ரீபெரியநாயகி அம்மன், ஸ்ரீகாமாட்சிஅம்மன், ஸ்ரீதெய்வங்கப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குப் பக்தர்கள், மருளாளிகள் மற்றும் மகிழஞ்சேரி கிராமவாசிகள் ஒன்றிணைந்து கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து திருப்பணி குழு அமைத்தனர். திருப்பணிக்குழுவின் மூலம் கோயில் கட்டுமான வேலைகள் முடிவுற்று, திங்கள்கிழமை மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, எஜமான் சங்கல்பம், கணபதி, நவக்கிரக, லக்ஷ்மி ஹோமங்கள், வாஸ்து சாந்தி நடைபெற்றது.

மாலையில் ம்ருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலைப் பிரவேசம்,  திரவியாஹுதி, பூர்ணாஹுதி நடைபெற்று முதல் கால யாகசாலை பூஜை முடிந்து தீபாராதனை நடைபெற்றது. திங்கள்கிழமைக் காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கி, பிம்பசுத்தி ரக்ஷாபந்தனம், ஸ்பர்சாஹுதி, கோபூஜை நடைபெற்று இரண்டாம்கால யாகசாலைப் பூஜை மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9.30 மணி அளவில் விமானங்களுக்கு கும்பாபிஷேகமும், 10 மணி அளவில் மூலவர்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது. 

கும்பாபிஷேக விழாவில், மும்பை, பெங்களூர், டெல்லி போன்ற அண்டை மாநிலங்கள்  மற்றும்  கடலூர், சேலம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களிலிருந்தும், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் திரளான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தைக் கண்டுகளித்தனர். இக்கோயிலில் ஸ்ரீபேச்சாயி அம்மன், ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீஉத்தண்டராயன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பரிவார தேவதைகளுக்கும் பல வண்ணங்களில் எழிலுற சன்னதிகள் எழுப்பப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பூஜைகள் மற்றும் ஹோமங்களை திருக்கண்டீஸ்வரம் டி.கே.வெங்கடேசசிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

நன்னிலம் காவல்துறையின் சார்பாக ஆய்வாளர் கு.சுகுணா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT