திருவாரூர்

கோயில் இடத்தில் கட்டுமான பணிக்கு தடை

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டுமானப் பணிக்கு புதன்கிழமை தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

DIN

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டுமானப் பணிக்கு புதன்கிழமை தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி தெற்குவீதியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஆகம விதிகளுக்கு புறம்பாகவும், நகரமைப்பு அனுமதி பெறாமலும் கட்டுமானப் பணி நடைபெற அனுமதி மறுத்து நாகை இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் தென்னரசு உத்தரவிட்டாா். எனினும், இந்த உத்தரவை மீறி கட்டடப் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருவாரூா் உதவி ஆணையா் ஹரிஹரன் முன்னிலையில், கோயில் செயல் அலுவலா் பி.எஸ். ராஜா, டிஎஸ்பி பழனிச்சாமி மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் கட்டடப் பணிகளுக்கு தடை விதித்து, ஆக்கிரமிப்பு இடத்தில் கம்பிவேலி அமைத்து சீல் வைத்து இந்து சமய அறநிலைய துறையின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று நள்ளிரவு முதல் விமான சேவைகள் சீராகும்! - விமானப் போக்குவரத்து அமைச்சகம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: பறிமுதல் வாகனங்கள் டிச.22, 23இல் பொது ஏலம்

மாணவர்கள் கவனத்துக்கு.. சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்!

எடப்பாடி அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!

பிக் பாஸ் 9: அரோரா காலில் விழுந்த கமருதீன்... தொடரும் வாக்குவாதம்!

SCROLL FOR NEXT