முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூர்: அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு

கூத்தாநல்லூர் நகர அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:01 AM
கூத்தாநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு.
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. 
கூத்தாநல்லூர் - வடபாதிமங்கலம் பிரதான சாலையில் அமைந்துள்ள
நகர அதிமுக அலுவலகத்திலிருந்து, நகரச் செயலாளர் ஆர்.ராஜசேகரன் தலைமையில், அவைத் தலைவர் ஆர்.குமார், பொருளாளர் ஜெ.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில், நகர துணைச் செயலாளர் கொய்யா பீ.மீரா மைதீன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளர் எஸ்.பி. காளிதாசன், நகர மன்ற உறுப்பினர்கள் முருகேசன், ஏ.சொற்கோ, நகர இளைஞர், இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் வி.எஸ்.நெடுமாறன், நகர் மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.கருணாநிதி, டி.கண்ணையன், விக்ரமன் மற்றும் எல்.பி. முஹம்மது முகைதீன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். 


லெட்சுமாங்குடிப் பாலத்தருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்திற்கு, மாலையணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கூத்தாநல்லூர் நகர அதிமுகவினர் கவனித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →