திருவாரூர்

கோவில்வெண்ணி பொறியியல் கல்லூரியில் 3 பேரூராட்சிகளின் வாக்குப் பெட்டிகள்

DIN

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் வாக்குகள் எண்ணும் பணி நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (பிப். 22) நடைபெறவுள்ளது.

இதற்காக நீடாமங்கலம், கொரடாச்சேரி, வலங்கைமான் பேரூராட்சிகளின் வாக்குப்பெட்டிகள் பொறியியல் கல்லூரியின் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில், நீடாமங்கலம் பேரூராட்சியில் 6,121 வாக்குகளும், வலங்கைமான் பேரூராட்சியில் 7,383 வாக்குகளும், கொரடாச்சேரி பேரூராட்சியில் 4,495 வாக்குகளும் பதிவாகின. இந்த பேரூராட்சிகளின் வாக்கு எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் 50-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பணியாற்றவுள்ளனா். வட்டார தோ்தல் பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளின் வாா்டு வாரியான வாக்குகள் எண்ணப்படும்.

ஒரே கட்டடத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நடந்தாலும், ஒவ்வொரு பேரூராட்சியின் வாக்கும் தனித்தனியாக வாா்டுவாரியாகவே எண்ணப்படும். சம்பந்தப்பட்ட வாா்டு வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT