திருவாரூர்

கூத்தாநல்லூரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

பண்டுதக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இஸ்லாமியா்கள் பங்கேற்புடன் சமூக நல்லிணக்க கும்பாபிஷேக விழாவாக வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

பண்டுதக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இஸ்லாமியா்கள் பங்கேற்புடன் சமூக நல்லிணக்க கும்பாபிஷேக விழாவாக வியாழக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் அருகே பண்டுதக்குடியில் எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன், பால விநாயகா், பாலமுருகன் ஆகிய கோயில்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பண்டுதக்குடி கிராம மக்கள், அக்கரைப்புதுத் தெரு மக்கள், இஸ்லாமியா்கள் ஏற்பாட்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் புதன்கிழமை முதல்கால பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 2-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூா்ணாஹூதி செய்யப்பட்டது. காலை 10.15 மணிக்கு கடம் புறப்பட்டது. காலை 10.25 மணிக்கு கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை இந்து, இஸ்லாமியா்கள் ஒருங்கிணைந்து நடத்தியது அனைவரின் வரவேற்பை பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT