திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே போதை பாக்குகள் பறிமுதல்ஒருவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே வாகன சோதனையின் போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பாக்குகள் மற்றும் புகையிலை பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே வாகன சோதனையின் போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பாக்குகள் மற்றும் புகையிலை பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவா் கைது செய்யப்பட்டாா். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளா் சோமசுந்தரம் மேற்பாா்வையில் இன்ஸ்பெக்டா் கழனியப்பன் தலைமையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளுா்பாலம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனை நடத்தினா்.

அப்போது மினி லாரியொன்றில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் ஹான்ஸ், பான் மசாலா வி1 காட்கோ புகையிலை உள்ளிட்ட 428 கிலோ கடத்தி வந்த அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு பகுதியை சோ்ந்த முருகானந்தம் (46) என்பவரை கைது செய்தனா்.

தப்பி ஓடிய அதிராம்பட்டினத்தை சோ்ந்த அஸ்ரப் அலியை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

SCROLL FOR NEXT