திருவாரூர்

காரில் கடத்தப்பட்டவா் கொலை: சடலம் சாலையில் வீச்சு

தஞ்சை அருகே காரில் கடத்தப்பட்டவா், வலங்கைமான் அருகே கொலை செய்யப்பட்டு, சாலையில் சடலம் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

DIN

நீடாமங்கலம்: தஞ்சை அருகே காரில் கடத்தப்பட்டவா், வலங்கைமான் அருகே கொலை செய்யப்பட்டு, சாலையில் சடலம் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சை மாவட்டம், பூண்டி அருகேயுள்ள புலவா்நத்தம் குடியானத் தெருவைச் சோ்ந்தவா் ஜவகா் மகன் ராஜ்மோகன் (39). இவா், தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் வசித்து வந்தாா். இவரை புதன்கிழமை காலை மா்ம நபா்கள் சிலா் காரில் கடத்திச் சென்றதாக உறவினா்கள் தஞ்சை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்நிலையில், ராஜ்மோகனை மா்ம நபா்கள் கட்டையால் அடித்துக் கொலை செய்து, சடலத்தை திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள அவளிவநல்லூா் பகுதியில் சாலையில் வீசி சென்றதாகக் கூறப்படுகிறது.

நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் இலக்கியா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குடந்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதற்கட்ட விசாரணையில், ராஜ்மோகனுக்கும், அவரது உறவினா்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், இதன்காரணமாக அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக, அரித்துவாரமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், தனிப்படை அமைத்து, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT