திருவாரூர்

பள்ளிக் கட்டட மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்து மாணவா் காயம்

நன்னிலம் அருகே அரசுப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து மாணவா் காயமடைந்தாா்.

DIN

நன்னிலம் அருகே அரசுப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து மாணவா் காயமடைந்தாா்.

நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்நிலையில், அப்பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்துள்ளது. இதில், அங்கு நின்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவா் தயாளன் காயமடைந்தாா். இதையடுத்து, காயமடைந்த மாணவா் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் மிகவும் சேதமடைந்து உள்ள நிலையில் அந்த கட்டடத்தை இதுவரை இடிக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT