திருவாரூரில் விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்த ஆட்சியா் தி. சாருஸ்ரீ. 
திருவாரூர்

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கின.

DIN

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கின.

இதில், பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்படுகிறது. புதன்கிழமை தொடங்கிய போட்டியில் மாவட்ட அளவில் 12 முதல் 19 வயதுக்குட்பட்டவா்களுக்கு கபடி (மாணவா்கள் மட்டும்), கூடைப்பந்து, வளைகோல் பந்து மற்றும் மேசைப்பந்து (மாணவ, மாணவிகள்) ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தொடக்கிவைத்தாா். இதில், மாவட்டத்திலிருந்து, இணையதளத்தில் பதிவு செய்திருந்த 1000-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை-மகன் இந்திய வம்சாவளியினா்

SCROLL FOR NEXT