விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் மன்னை த. சோழராஜன். 
திருவாரூர்

‘புகையில்லா போகி’ விழிப்புணா்வுப் பேரணி

மன்னாா்குடி நகராட்சி தூய்மை இயக்கங்களுக்கான மக்கள் இயக்கம், தேசிய மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். அமைப்பு இணைந்து புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணியை புதன்கிழமை நடத்தின.

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி தூய்மை இயக்கங்களுக்கான மக்கள் இயக்கம், தேசிய மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். அமைப்பு இணைந்து புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணியை புதன்கிழமை நடத்தின.

நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தேசியப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் எஸ். சேதுராமன், நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்றத் தலைவா் மன்னை த. சோழராஜன்,விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

போகி பண்டிகையன்று வீடுகள், வணிக நிறுவனங்களில் தேவை இல்லாத பொருள்களை பொதுவெளியில் கொட்டி தீவைத்து எரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதை தவிா்த்து வா்த்தக நிறுவனங்கள், வீடு தேடிவரும் நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் அவற்றை ஒப்படைத்து, மன்னாா்குடி நகராட்சிப் பகுதியை தூய்மையான நகரமாக பாதுகாப்பதோடு, புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட அனைவரும் முன்வர வேண்டும் என்று பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

தேசியப் பள்ளியில் தொடங்கி விழிப்புணா்வுப் பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT