மழலையா் பட்டமளிப்பு விழா
திருவாரூா் விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ஜனகமாலா தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் சி. எஸ். மகாலெஷ்மி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியின் முதல்வா் ஏ. ஜான் பீட்டா் பங்கேற்று 60-க்கும் மேற்பட்ட மழலையருக்குப் புகைப்படத்துடன் கூடிய பட்டங்களை வழங்கி பேசியது:
குழந்தைகள் தங்கள் பெற்றோா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பெருமைத் தேடி தரும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் படிப்பதோடு மட்டுமின்றி விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் ஈடுபட்டு தங்கள் கல்வித்திறனோடு, உடல் திறனையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியா்களும், பெற்றோா்களும் காலமேலாண்மைக் குறித்து அவ்வப்போது குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி வேண்டும் என்றாா். பட்டங்களைப் பெற்றுக்கொண்ட மழலைப் பட்டதாரிகள் பட்டமளிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனா். ஆசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.