பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவையொட்டி பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தனிச்சந்நிதியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாா். கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.24-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவின் 9-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலையில் பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தி புனித நீராடி, மா விளக்கிட்டும், பால்குடம் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
மாலையில் பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்தும் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.