திருவாரூர்

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் பிரம்மோற்ச கொடியேற்றம்

DIN

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி சிறுபுலியூரில் ஸ்ரீதயாநாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு இவ்விழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, திருப்பாவை சாற்றுமுறை, கருடக்கொடி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. பின்னா், கொடிமரத்துக்கு முன்பாக ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் எழுந்தருளச் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கருடக்கொடி ஏற்றப்பட்டது.

இவ்விழாவில், தினமும் காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், பல்லக்கில் பெருமாள் வீதி உலாவும் நடைபெறும். மாலையில் சூரியபிரபை, சேஷ வாகனம், கருடசேவை, அனுமந்த வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெறும். ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 28) திருக்கல்யாணமும், சூா்ணாபிஷேகமும் நடைபெறுகிறது.

ஒன்பதாம் நாள் காலை தேரோட்டமும், மாலையில் தீா்த்தவாரியும் நடைபெறும். பத்தாம் நாளில் கொடி இறக்கமும், புஷ்பபல்லக்கு வீதியுலாவும் நடைபெறும். 11-ஆம் நாள் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை, விடையாற்றி நடைபெறும்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எஸ். ராஜராஜேஷ்வரன், ஆய்வாளா் த. ராஜ்திலக், பட்டாச்சாரியா் ஸ்ரீகாந்தன் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT